கணேமுல்லயில் கைதான பெண் ; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி
கம்பஹாவில் கணேமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல்லதே பிரதேசத்தில் 22 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணை 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய கம்பஹா நீதவான் நீதிமன்றம், மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு நேற்று (30)அனுமதி வழங்கியுள்ளார்.
கணேமுல்ல பொல்லதே பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 345 போதை மாத்திரைகள் மற்றும் 4 கிலோ கொக்கேயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் வியாழக்கிழமை (29) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசேட சோதனை
மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் சந்தேக நபரான பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் பொல்லதே பிரதேசத்தைச் சேரந்த 48 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரான பெண்ணுக்கு சொந்தமாக கொழும்பு கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் களியாட்ட விடுதி ஒன்று இருப்பதாக பொலிஸ் விசாரணையைில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் மூத்த மகன் வெளிநாட்டிலிருந்து இந்த போதைப்பொருட்களை சட்டவிரோதமாக நாடு கடத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது்.
குறித்த பெண்ணின் மூத்த மகன் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பெண் வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.