யாழில் இன்று கோலாகலமாக ஆரம்பமான கண்காட்சி!
யாழ்ப்பாண கலாச்சார நிலையத்தின் வளாகத்தில் Made in the srilanka வர்த்தகக் கண்காட்சியானது இன்றைய தினம் (06-10-2023) காலை ஆரம்பமானது.
யாழில் உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு மேம்படுத்தும் நோக்கில் இலங்கை கைத்தொழில் அமைச்சின் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை மாவட்ட செயலகத்தோடு இணைந்து இந்த கண்காட்சியை ஆரம்பித்துள்ளது.
குறித்த கண்காட்சியானது இன்றைய தினம் முதல் (6,7,8) எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.
இந்த கண்காட்சியில் கடல் சார்ந்த உணவு உற்பத்திகள்இ பனை மற்றும் தும்புசார் உற்பத்திகள், ஆடை உற்பத்திகள், கைப்பணி உற்பத்திகள், தோல் உற்பத்திகள், காலணி கைப்பை போன்ற உற்பத்திகள் மற்றும் ஏனைய உள்ளூர் உற்பத்திகள் கண்காட்சி விற்பனைக்குமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.