தென்னிலங்கையில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் ; புறாவுக்காக பறிபோன மனித உயிர்
புறாக்கள் வளர்ப்பது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பகா பேலியகொடை காவல்துறை தெரிவித்துள்ளது.
பேலியகொடை காவல்துறைக்கு உட்பட்ட மீகஹவத்த பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தனிப்பட்ட மோதலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் வத்தளை, ஒலியமுல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலதிக விசாரணைகளை பேலியகொடை காவல்துறை மேற்கொண்டு வருகின்றது.