கொழும்பு விடுதியில் உயிரிழந்த சுற்றுலா பயணிகள் ; பிரேத பரிசோதனையிலும் துலங்காத மர்மம்
கொழும்பு விடுதியொன்றில் உடல்நிலை சரியில்லாமல் பெப்ரவரி 1 ஆம் திகதி உயிரிழந்த பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவலை தொடர்ந்து மேலும் பொலிஸார் விசாரைணைகள் ஆரம்பித்துள்ளனர்.
அதில் எபோனி மெக்கின்டோஷ் (24) மற்றும் ஜேர்மன் சுற்றுலாப் பயணி நாடின் ரகுஸ்(26) ஆகியோரின் பிரேத பரிசோதனைகள் நேற்று (10) நடத்தப்பட்டன.
எனினும் பிரேத பரிசோதனையில் இவர்கள் இருவரின் மரணத்திற்கான காரணம் சரியாக தெளிவாகத் தெரியவில்லை, மேலும் விசாரணை நடந்து வருகிறது.
மெக்கின்டோஷின் குடும்பத்தினர் மகளின் உடலை இங்கிலாந்துக்கு கொண்டு செல்ல வந்துள்ளனர், அதே நேரத்தில் ரகுஸின் உடல் ஜேர்மனிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இவர்களின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, மேலும் இவர்கள் தங்கியிருந்த விடுதி அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது.