அருகம்பை கடற்கரையை சுத்தம் செய்த சுற்றுலா பயணிகள்
சுற்றுலா பயணிகள் மற்றும் இலங்கை இராணுவ வீரர்கள் இணைந்து மட்டக்களப்பு அருகம்பை விரிகுடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
துப்புரவுப் பணியில் சுமார் 200 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
சுத்தம் செய்த சுற்றுலா பயணிகள்
அதோடு அறுகம்பை சுற்றுலா காவல்துறை பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொத்துவில் பிரதேச சபை அதிகாரிகளும் இந்த துப்புரவுப் பணிகளில் இணைந்து செயற்பட்டனர்.
அறுகம்பை கடற்கரைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்தப் பணிகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
24ஆவது படைப்பிரிவின் துணைத் தளபதி பிரிகேடியர் பிரியங்க குலதிலக, 242வது படைப்பிரிவின் தளபதி கேணல் துஷார கேலே கோரலே, 14வது லயன்ஸ் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் சுரேஷ் பெரேரா மற்றும் 24வது படைப்பிரிவின் சிவில் தொடர்பு அதிகாரி கேணல் சிசிர குமார ஆகியோரும் இந்த செயற்றிட்டப் பணிகளில் பங்கேற்றனர்.