இலங்கையில் சுற்றுலா விசா கட்டணம் அதிகரிப்பால் ஏற்பட்ட நிலை!
சுற்றுலா விசாவிற்கான கட்டணம் அதிகரிப்பதன் காரணமாக நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 50 வீதத்தால் குறையும் அபாயம் உள்ளதாக இலங்கை பயண முகவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது சுற்றுலா விசாவிற்கு 100.77 டொலர்களை வசூலிப்பதாகவும், விசா கட்டணம் 50 டொலர்களாக இருந்த போது வெளிநாட்டவர்கள் அதிகளவில் வந்ததாகவும் இலங்கை பயண முகவர்கள் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டு முதல் தடவையாக சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 200,000க்கு கீழ் வீழ்ச்சியடைந்ததன் மூலம் இலங்கை சுற்றுலாத்துறை கடந்த மாதத்தில் சடுதியாக வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மொத்தம் 148, 867 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.