நாட்டில் மின் கட்டணம் செலுத்துவதில் முதலிடம் யாருக்குத் தெரியுமா? மாதாந்தம் எழுபது மில்லியன் பதிவு!
இலங்கைத் துறைமுக அதிகார சபை மற்றும் கொழும்புத் துறைமுகத்தில் நாட்டின் மிகப்பெரிய மின்சாரக் கட்டணம் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபைத் தரவுகள் கூறுகின்றன.
இலங்கை துறைமுக அதிகாரசபை என்ற பெயரில் நான்கு கணக்குகளின் கீழ் மின்சாரம் வழங்கப்படுகின்றது.
மாதாந்தம் எழுபது மில்லியன் ரூபா
இந்நிலையில் மாதாந்தம் ஏறக்குறைய எழுபது மில்லியன் ரூபா மின்சாரக் கட்டணம் பதிவு செய்யப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதேவேளை கொழும்பு நகரின் தருபஹாவில் உள்ள சொகுசு ஹொட்டலில் இரண்டாவது அதிக மின்சாரக் கட்டணம் பதிவாகியுள்ளது. வழமையாக மாதாந்தம் முப்பது மில்லியன் ரூபாவை நெருங்குவதாக சபை கூறுகிறது.
கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையம்(WTC) இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்து, மாதந்தோறும் 15 மில்லியன் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படுகிறது.