பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு! கிரிக்கெட் வர்ணனையாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தாமஸ் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் இரகசிய பொலிஸார் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளியான தகவல்கள்
பிரையன் தாமஸின் கைத்தொலைபேசியை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் நேற்று பகல் முழுவதும் அவர் வீட்டில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
மறைந்த தினேஷ் ஷாப்டர் பயன்படுத்திய கையடக்கக் தொலைபேசி தொடர்பான தொலைத்தொடர்பு பகுப்பாய்வு அறிக்கையை வழங்குமாறு தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களுக்கு உத்தரவிடுமாறு பொரளை பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை சமர்ப்பித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு சேவை வழங்குநர்களிடமிருந்து பதிவைப் பெற நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், சாப்டருக்கும் பிரையன் தோமசிற்கும் இடையிலாக பணகொடுக்கல் வாங்களிற்கும் இந்த கொலைக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
May you like this Video