ரபாடாவின் வேகத்தில் சரிந்த முன்னணி வீரர்கள் : இந்திய அணி தடுமாற்றம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டு இருக்கிறது.
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணி டாசை இழந்தது.
இந்த நிலையில் முதலில் கௌரவமான இலக்கை எட்டினால் மட்டுமே இந்த போட்டியில் இந்திய அணியால் வெல்ல முடியும்.
இந்த நிலையில் முதலில் களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
எனினும் ரோகித் சர்மா ரபாடா வீசிய ஷார்ட் பாலை அடிக்க முயன்று 5 ரன்களில் வெளியேறினார்.
இதனை அடுத்து சுப்மன் கில் தேவையில்லாமல் லெஃப்ட் சைடில் சென்ற பந்தை தொட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.
தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் 17 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 24 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனை அடுத்து விராட் கோலி ,ஸ்ரேயாஸ் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாடி அணியை சரிவிலிந்து மீட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விராட் கோலி இந்த போட்டியில் ஒரு சாதனையை செய்திருக்கிறார்.
இந்த ஆட்டத்தில் விராட் கோலி 17 ரன்கள் அடித்த நிலையில் தென்னாப்பிரிக்க மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தார்.
இதன் மூலம் ராகுல் டிராவிட்டின் சாதனையை விராட் கோலி முறியடித்திருக்கிறார். டிராவிட் 21 போட்டிகளில் 1252 ரன்கள் அடித்தந்த நிலையில் விராட் கோலி தற்போது 15 டெஸ்ட் போட்டிகளில் கடந்து இருக்கிறார்.
விராட் கோலி இந்த டெஸ்ட் போட்டியில் 65 ரன்கள் எடுத்தால் இரண்டாவது இடத்தில் உள்ள ஷேவாக்கின் சாதனையை முறியடித்துவிடுவார்.
சேவாக் பதினைந்து போட்டிகளில் 1306 ரன்கள் தென்னாப்பிரிக்கா மண்ணில் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் இருக்கிறார்.
அவர் 25 போட்டிகளில் விளையாடி 1741 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த டெஸ்ட் தொடர் முடிவதற்குள் சச்சின் டெண்டுல்கர் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்துள்ளது.
தென்னாபிரிக்க ஆடுகளும் பேட்டிங்கிற்கு கடும் சவால்களை அடிக்க கூடியது. இதனால் இங்கு திறமையும் யுக்தியும் தெரிந்த வீரர்கள் மட்டுமே ஜொலிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.