இலங்கையுடனான பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ள பிரபல 5 நாடுகள்!
வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரஷ்யா உட்பட ஐந்து விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி சுவிஸின் ஓய்வு விமான நிறுவனமான Edelweiss மற்றும் Air France ஆகியன நவம்பர் மாதம் முதல் இலங்கைக்கான விமானங்களை ஆரம்பிக்கும் எனவும் அவர் கூறினார். அதேவேளை ரஷ்யாவின் Aeroflot விமானங்களும் நவம்பரில் மீண்டும் இலங்கைக்கு சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் இத்தாலியில் இருந்து இயக்கப்படும் மேலும் இரண்டு விமானங்கள் டிசம்பரில் இலங்கைக்கு விமான சேவையை தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் விளம்பரங்களை முன்னெடுக்குமாறும் சுற்றுலா அதிகாரிகளுக்கு சுற்றலாத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.