10 சிறந்த உலக தலைவர்களில் கோட்டாபயவும் இடம்பெறுவார்! அமைச்சர்
ஜனாதிபதி வரலாற்றில் கொரோனா தொற்று நோயின் போது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்த 10 சிறந்த உலக தலைவர்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் (Gotabaya Rajapaksa) இடம் பெறுவார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார்.
இன்று (28-12-2021) செவ்வாய்கிழமை பதுளை – செங்கலடி வீதியின் பிபில முதல் செங்கலடி வரையிலான 87 கிலோமீற்றர் பகுதியை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்திற்கு ஆரோக்கியமான அபிவிருத்தியை உறுதி செய்வதே ஜனாதிபதியின் முயற்சியாகும். கொரோனா தொற்றுநோய் ஏற்பட்ட போது, அனைத்து நாடுகளும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டது. உலகத் தலைவர்கள் பொது உயிர்களைக் காப்பாற்றுவதில் பெரும் சவாலை எதிர்கொண்டனர்.
ஜனாதிபதியின் விடாமுயற்சியினால் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி இயக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்கவில்லை. திட்டத்தை நாசப்படுத்தவே முயன்றது.
குறுகிய காலத்தில் இலங்கை மிகவும் அபிவிருத்தி நாடாக அறியப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.