நீதிபதி இளஞ்செழியனின் அரசியல் பிரவேசம் ; அலறித்துடிக்கும் அர்ச்சுனா இராமநாதன்
நீதிச்சேவையில் இருந்து தான் ஒருபோதும் விரும்பி ஓய்வு பெறவில்லை எனவும் கட்டாயப்படுத்தி ஓய்வு பெறப்பட்டேன் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்ததையடுத்து அவர் குறித்த அதிர்வுகள் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளன.
அண்மையில் பரிஸ் அரங்கில் தனது அரசியல் பிரவேசம் தொடர்பிலான ஊகங்களுக்கு அவர் வழங்கிய பதிலானது நேரடியாக தனது அரசியல் பிரவேசம் அல்லது வடமாகாண சபைத் தேர்தலில் களம் இறங்குவது குறித்து வெளிப்படுத்தவில்லை.
இளஞ்செழியன் நீதித்துறையில் அனுபவத்தைக் கொண்ட ஒருவராக இருந்தாலும் அவர் அரசியல் அனுபவமற்ற ஒருவராவார்.
எவ்வாறாயினும், அவர் தனது அரசியல் ஈடுபாட்டை இன்னும் வலுவாக உறுதிப்படுத்தவோ உறுதியாக மறுக்கவோ இல்லை.
இது தொடர்பிலான முழுமையான காணொளியை இங்கு காணலாம்.....