தீராத பல் வலியா? 10 நிமிடத்தில் சரி செய்யலாம் எப்படி தெரியுமா? இதோ வழிகள்
தீராத பல் வலியால் நாளுக்கு நாள் துடிந்து வரும், உங்களின் பற்களை ஆரோக்கியமாக வைக்க உதவும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்.
பல்வலி வந்தாலே தாங்க முடியாத வலி இருக்கும். அன்றைய நாள் முழுவதும், அசௌகர்யமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், பல் மருத்துவரோ அல்லது பல் மருத்துவமனையோ இல்லாத நேரத்தில் பல் வலி ஏற்பட்டால் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
சில நேரம் நாம் எடுத்து கொள்ளும், வலி நிவாரணி மாத்திரைகளைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே, வீட்டில் இருந்த படியே இந்த பல்வலி பிரச்சனையை நீக்க உதவும் நம்முடைய முன்னோர்களின் வீட்டு வைத்திய குறிப்புகள் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
பல் வலிக்கான காரணம்: பல்லின் எனாமல் தேய்வதுதான். சிலருக்கும் இனிப்பாகவோ, குளிர்ச்சியாகவோ, சூடாகவோ சாப்பிட்டால் பல் கூச்சம் ஏற்படும். இதுதவிர சிலருக்கு பல்லின் வேர் தெரியத் தொடங்கும்.
அதாவது ஈறுகள் இறக்கம் அடைந்து பல்லின் வேர் தெரியும் போது பல் கூச்சம் ஏற்படலாம். இன்னும், சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை மற்றும் உணவுக்குழாய் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். வீட்டில் இருந்தே பல் கூச்சம் தற்காலிமாக போக்க சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி பாருங்கள்.
பல்வலியை போக்க வீட்டு வைத்தியம் இதோ
கிராம்பு: கிராம்பு பெரும்பாலும் உணவின் சுவையை அதிகரிக்கப் பயன்படுகிறது, ஆனால் அது பல்வலியையும் குணப்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கிராம்பை நசுக்கி அதை பற்கூச்சம் உள்ள இடத்தில் வைத்தால் சரியாகிவிடும்.இலையென்றால், கிராம்பு எண்ணெயை காட்டனின் உதவியுடன் பற்களில் வலியுள்ள பகுதியில் தேய்த்து வந்தால் சற்று நிவாரணம் கிடைக்கும். இது நம் முன்னோர்களின் வைத்திய முறையாகும்.
பூண்டு: பூண்டு பற்களை நசுக்கி வலி உள்ள இடத்தில் வைக்கவும். இதன் காரணமாக பல் வலி பறந்துவிடும். ஏனெனில், பல பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பூண்டில் காணப்படுகின்றன. இது பற்களில் இருக்கும் கிருமிகளை நீக்கி வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
மஞ்சள் - உப்பு கொண்டு பல் துலக்கலாம்: மஞ்சள் சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புள்ள பொருள். இதை தூள் உப்புடன் சேர்த்து தொடர்ந்து பற்களை தேய்த்து, மசாஜ் பண்ணுவதுபோல் தேய்க்க வேண்டும். அவ்வாறு தேய்த்து வந்தால் பற்கூச்சம் நீங்கும்.
தேன்: தேன் நல்ல வலி நிவாரணியாகவும் இருக்கிறது. எனவே, ஒரு டேபிள் ஸ்பூன் தேனை ஒரு டம்ப்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து வாயை கொப்பளித்து வர பற்கூச்சம் நீங்கும். தேனில் ஆன்டி செப்டிக், ஆன்டி பாக்டீரியல் பண்பு இருக்கிறது.
கொய்யா இலைகள்: கொய்யா இலைகளில் ஆன்டி மைக்ரோபியல் பண்பு உள்ளது. எனவே, கொய்யா இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல்வலி ஏற்பட்டால், கொய்யா இலைகளை பல் வலி உள்ள இடத்தில் மெல்லத் தடவுங்கள், படிப்படியாக நீங்கள் நிவாரணம் பெறுவீர்கள். இது தவிர, கொய்யா இலைகளை வேகவைத்து வடிகட்டி, அந்த தண்ணீரை வாய் கழுவி பயன்படுத்தலாம்.