நாளை பல மாகாணங்களில் சுட்டெரிக்கபோகும் சூரியன்
நாட்டின் பல மாகாணங்களில் நாளை (09) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் உயர்வடையக்கூடும்.

இதேவேளை நாளை நண்பகல் 12.12 அளவில் சிலாபம், பிங்கிரிய, ஹல்மில்லவெவ, பண்டுவஸ்நுவர, கொகரெல்ல, கவுடுபெலல்ல, கோப்பாவெளி மற்றும் கிரான்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
எனவே வெப்பத்தினால் ஏற்படும் உடல் பிரச்சினைகளை சரிசெய்ய போதியளவு தண்ணீர் குடிப்பதோடு, வெளியில் செல்வதை முடியுமான அளவு குறைத்துக்கொள்வது அவசியம் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.