அதிகாரிகள் அசமந்தத்தால் தந்தையின் மடியில் உயிரிழந்த பிஞ்சுக்குழந்தை!
அதிகாரிகள் அசமந்தத்தால் தந்தையின் மடியில் நான்கு வயது பிஞ்சுக்குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்தரகாண்டின் பித்தோராகார் மாவட்டத்தில் உள்ள பி.டி. பாண்டே மருத்துவமனைக்கு, உடல் நலக்குறைவால் தனது 4 வயது குழந்தையை அழைத்து கொண்டு பெற்றோர் சென்றுள்ளனர்.
எனினும் , குழந்தையை அவசர சிகிச்சை வார்டில் சேர்க்க மருத்துவர்கள் மறுத்து விட்டனர்.
நீண்ட வரிசை
அத்துடன் குழந்தையை வெளிப்புற நோயாளிகள் பிரிவில் காண்பிக்குமாறு கூறியுள்ளனர்.
அந்த வார்டில் வரிசை நீண்டு இருந்தது. குழந்தையுடன் பெற்றோர் வரிசையில் நின்றனர். அவர்கள் நீண்டநேரம் வரிசையிலேயே காத்திருந்தபோது குழந்தை தந்தையின் மடியிலேயே உயிரிழந்து விட்டது.
பெற்றோர் இருவரும் குழந்தையின் மறைவால் துக்கம் பொறுக்க முடியாமல் அழுதனர். அது காண்போரை கலங்க செய்தது. இந்நிலையில் வைத்திய அதிகாரிகளின் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
You My Like This Video