இன்றைய பத்திரிகை செய்திகள்; ஏலத்தில் விடப்படும் இலங்கைப்பெண்கள்!
இலங்கையில் வெளியாகும் முக்கிய பிரதான பத்திரிகைளின் செய்திகளின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு,
01) சந்திரிகாவின் தீர்வை நடைமுறைப்படுத்தலாம் தெரிவுக்குழு அமைத்து நிதியை வீணடிக்க வேண்டாம் ; இனப்பிரச்சினை தீர்வு குறித்து கூட்டமைப்பு எம். பி சபையில் கோரிக்கை.
02) கடவுச்சீட்டுக்களுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு மோட்டார் வாகன பதிவு கட்டணங்களும் உயர்வு.
03) இந்தியாவின் அழுத்தம் இலங்கைக்கு பாதிப்பு எமது வெளிவிவகாரக் கொள்கையை உடனடியாக மறுசீரமைக்க வேண்டும் சரத் வீரசேகர எம். பி வலியுறுத்து.
04) புலிகளை வீழ்த்தியது எமது ஆயுதங்களே பாகிஸ்தானின் ஆயுத உற்பத்தியாளர் தகவல்.
05) கற்றல் உபகரணங்கள் 300 வீதத்தால் உயர்வு சீ.ஆர் கொப்பி 800 ரூபா
06) பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலத்தில் 12 இலங்கைப் பெண்கள்
ஓமானில் விற்கப்பட்டதாக கூறுகிறார் காவிந்த ஜயவர்தன எம். பி