பரீட்சையில் மோசடி ; விசாரணைக்கு நீதவான் கடும் உத்தரவு
கொழும்பு பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆங்கில டிப்ளோமா பரீட்சைக்குத் தோற்ற வேண்டிய பரீட்சார்த்திக்குப் பதிலாக வேறொரு நபர் பரீட்சைக்குத் தோற்றிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நீதிமன்றில் உண்மைகளைத் தெரிவிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (24) கொழும்பு மோசடி விசாரணை பிரிவுக்கு உத்தரவிட்டார்.
விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு மோசடி விசாரணை பிரிவு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், பரீட்சார்த்தி ஒருவருக்குப் பதிலாக மற்றொரு நபர் தவறான தகவல்களை சமர்ப்பித்து ஆங்கில டிப்ளோமா பரீட்சைக்குத் தோற்றியது தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.