இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள தங்கத்தின் விலை
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
இதனடிப்படையில், இன்றைய (2024.06.26) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 710,397 ரூபாவாக காணப்படுகின்றது.
தங்க விவரம்
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 25,060 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 200,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் 22,980 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் 183,800. ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,930 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 175,450 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.