டொலருக்கு நிகராக வீழ்ச்சி அடைந்த ரூபாவின் பெறுமதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (25) சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெருமதி 289.15 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 298.20 ரூபாவாகவும் உள்ளது.
மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சி கண்டுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373 ரூபாய் 63 சதம், விற்பனைப் பெறுமதி 388 ரூபா 28 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331 ரூபாய் 42 சதம், விற்பனைப் பெறுமதி 324 ரூபாய் 42 சதம் ஆனவும் உள்ளது.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331 ரூபாய் 28 சதம், விற்பனைப் பெறுமதி 216 ரூபாய் 65 சதமாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபா 15 சதம், விற்பனைப் பெறுமதி 298 ரூபாய் 20 சதமாகவும் பதிவாகியுள்ளது.