குதிரை சவாரி செய்ய நினைத்த யுவதிக்கு நேர்ந்த கதி!
மட்டக்குதிரை சவாரி செய்து கொண்டிருந்த இத்தாலிய பிரஜையான 16 வயது யுவதி ஒருவர் தவறி விழுந்து காயமடைந்துள்ளார். நுவரெலியா மாநகரசபை மைதானத்திற்கு அருகில் இன்று (09) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டகுதிரை திடீரென முரட்டுத்தனமாக வேகமாக சென்றதில் தவறி விழுந்து விலா எலும்பில் ஏற்பட்ட முறிவு காரணமாக யுவதி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நுவரெலியாவிற்கு சுற்றுலா வருபவர்கள் மட்டக்குதிரை சவாரி செய்யும் போது பாதுகாப்பு தலைக்கவசம் அணியாததும் இதுபோன்ற காயங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் சம்பவம் தொடர்பாக நுவரெலியா சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.