ஜனாதிபதி ரணிலை தேடும் பங்களாதேக்ஷ்; பவித்ரா புகழாரம்!
தற்போதைய பங்களாதேஷ் , இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒரு தலைவரைத் தேடிக்கொண்டிருப்பதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒரு துணிச்சலான தலைவர் பிறந்ததன் காரணமாகவே இலங்கை இவ்வாறான ஆபத்தான நிலைமையை மரபுரிமையாகப் பெறவில்லை எனவும் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
துளிகூட இரத்தம் சிந்தாமல் நாட்டை மீட்டெடுத்தவர்
கொழும்பில் இடம்பெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒட்டுமொத்த பங்களாதேஷுமே நெருப்புக் குவியல் ஆகிவிட்டது. இன்று பங்களாதேஷ் ரணில் விக்கிரமசிங்க போன்ற தலைவரைத் தேடிக்கொண்டிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒரு தலைவர் இந்த தாய் மண்ணில் பிறந்ததால் நமக்கு அந்த நிலை ஏற்படவில்லை.
மக்கள் போராட்டங்களை கண்டு அஞ்சி நாட்டின் தலைவர், நாட்டை விட்டு வெளியேறிய போது, ஒரு துளிகூட இரத்தம் சிந்தாமல் தாய்நாட்டின் அரசமைப்பை மீட்டெடுத்தவர் வேறுயாருமல்ல என்றும் அவர் கூறினார்.
எனவே நாம் இன்று சகல நிறங்களையும் கட்சிகளையும் புறந்தள்ளி எமது கடமையில் இணைந்து கொள்கின்றோம் என்றும் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.