30 வயதில் உயிரிழந்த பிரபல நடிகை; சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையும், சமூக வலைதள நட்சத்திரமுமான திவ்யங்கா சிரோஹி தனது 30 வயதிலேயே உயிரிழந்த தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் பிறந்த இவர்,. காசியாபாத்தில் வசித்து வந்துள்ளார். தனது அபாரமான நடிப்பு மற்றும் நடனத் திறமையால் குறுகிய காலத்திலேயே ஹரியான்வி இசைத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர்.

திடீரென உடல்நலக் குறைவு
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திவ்யங்காவிற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இந்தத் திடீர் மறைவு திரையுலகினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரையில் அவரது துடிப்பான நடிப்பு மற்றும் அழகான முகபாவனைகள் ஹரியானா மட்டுமின்றி வட மாநிலங்கள் முழுவதும் அவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. அது மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் அவர் ஒரு மிகப்பெரிய இன்ஃப்ளூயன்சராகத் திகழ்ந்தார்.
திவ்யங்காவிற்கு, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமான (1.3 Million) ஃபாலோயர்கள் உள்ளனர் . இந்நிலையில் இவ்வளவு சிறிய வயதில், அதுவும் புகழின் உச்சியில் இருக்கும்போது அவர் மறைந்ததை யாராலும் நம்ப முடியவில்லை என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்