பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் விஜய்!
இந்திய பிரதமர் மோடி இன்று பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், பிரதமர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றது முதலே மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து வருகிறது .

உலக அரசியல் தலைவர்கள் வாழ்த்து
இன்று பிரதமர் மோடி தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு உலகெங்கிலும் இருந்து அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் விஜய் தனது வாழ்த்து செய்தியில் , வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.