ஊழியர்களை தாக்கி எரிபொருள் நிலையத்தில் துணிக்கரக்கொள்ளை
எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்களை இனந்தெரியாதோர் தாக்கி இரண்டு இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொள்ளைச்சம்பவம் இரத்தினபுரி திருவெனாகெட்டிய கோனகும்புர பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இந்த கொள்ளைச்சம்பவம் பதிவாகியுள்ளது.
ஊழியர்கள் மீது தாக்குதல்
இரு இனந்தெரியாத நபர்கள் கடந்த 31 ஆம் திகதி அதிகாலையில் எரிபொருள் நிலையத்துக்கு வந்து அங்கு சேவையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை பொல்லினால் தாக்கி ஊழியர் ஒருவரின் கையை கத்தியால் வெட்டி காயப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது கொள்ளையர்கள் ஊழியர்களை பயமுறுத்தி இரண்டு இலட்சத்துக்கு அண்மித்த பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்ந்லையில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவிலே கொள்ளையடிக்கும் சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்ய ஆரம்பகட்ட விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தனர்.