ஃப்ளூ காய்ச்சலில் இருந்து தப்பிக்க உதவும் குறிப்புகள்
தற்போது மழக்கால பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் இந்த ஃப்ளூ காய்ச்சலால், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வரை வைரஸ் தொற்றின் தாக்கம் எளிதாக ஏற்பட வாய்ப்புண்டு.
அறிகுறிகள்
மூக்கில் நீர் வடிதல், உடல் வலி, தலைவலி, இருமல் போன்றவை காணப்படுகிறது.
ஃப்ளூ காய்ச்சல் வராமல் பாதுகாக்கும் வழிமுறை
ஃப்ளூ காய்ச்சலில் இருந்து விடுபட சில பாதுகாப்பான நடைமுறைகளைக் கையாள வேண்டும். அவை என்னென்ன என பார்க்கலாம்,
முகக்கவசம் அணியுங்கள்
ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகளாக இருமல், தும்மல் போன்றவை ஏற்படலாம். இருமலின் போதும், தும்மலின் போதும் மற்றவர்களுக்குக் காய்ச்சல் பரவாமல் இருக்க கைக்குட்டை அல்லது துணியால் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும்.
ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சோப்பு பயன்படுத்தி, கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும். வெளியில் செல்லும் போது தவறாமல் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.
வெந்நீர் அருந்துதல்
இந்த குளிர்காலத்தில் நோய்த்தொற்றுக்கள் எளிதில் பரவுவதால், குடிநீரை நன்றாகக் கொதிக்க வைத்து ஆறிய பின்னர் குடிக்க வேண்டும்.
தொண்டையில் கரகரப்பு இருப்பின், சமையல் கல் உப்பை வெந்நீரில் சேர்த்து, அந்த நீரை தொண்டையில் படுமாறு வாயில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகள்
வைட்டமின் சி மற்றும் புரதச்சத்து மிகுந்த உணவு வகைகளை எடுத்துக் கொள்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இவை வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்க உதவுகிறது.
உடலுக்கு நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உதவும் உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுத்தமாக இருங்கள்
மற்றவர்களிடம் இருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளியைக் கடைபிடிப்பதை நினைவில் கொள்ள வேண்டும். வெளியில் சென்று வீட்டிற்குத் திரும்பிய பின்னரும், மற்ற வேலைகளைச் செய்து பின்னரும் கை மற்றும் கால்களை நன்கு சோப்பு போட்டு கழுவிக் கொள்ள வேண்டும்.
குறிப்பு;-
ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரை அணுகி உரிய அறிவுரைகளைப் பெற்ற பின்னரே மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.