காலிமுகத்திடலில் பதற்ற நிலை ; மின்கம்பத்தில் ஏறி ஒருவன் போராட்டம்
காலிமுகத்திடலிலுள்ள அதியுரமான மின் கம்பத்தில் ஏறி பொலிஸ் அதிகாரிகள் ஆறு பேரை கைது செய்யுமாறு நபர் ஒருவர் தற்போது (15.01.2026) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
எம்பிலிபிட்டியவைச் சேர்ந்த ஜீவன் என்ற நபரே இவ்வாறு கொளுத்தும் வெயிலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

களனி பொலிஸ் பகுதியில் ஆறு பொலிஸார் தன்னை தாக்கியதாகவும் அவர்களை உடன் கைது செய்யுமாறும் கோரிக்கை விடுத்து பதாகை ஒன்றை எழுதி வைத்துவிட்டு மின் கம்பத்தில் ஏறியுள்ளார்.
அத்துடன், உடனே அந்த ஆறு பொலிஸாரும் காலிமுகத்திடலுக்கு வரவேண்டும் எனவும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என கோசமெழுப்பியாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு தீயணைக்கும் படைவீரர்கள் மற்றும் தீயணைக்கும் வாகனம் ஆகியன நிறுத்தப்பட்டுள்ளன.



