பெருமளவு பழங்ளோடு குடைசாய்ந்த டிப்பர் ; தமிழர் பகுதியில் சம்பவம்
மட்டக்களப்பு கிரான்குளத்தில் இன்று (11) சம்மாந்துறை நோக்கி பழங்களை ஏற்றிக்கொண்டு விரைந்துவந்த டிப்பர் விபத்துக்குள்ளானது.
இவ் விபத்து சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் சீமூன் ஹோட்டலுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
எம்பிலிப்பிட்டியவில் இருந்து பழங்களை ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பு- கல்முனை பிரதான நெடுஞ்சாலை வழியே சம்மாந்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனம் கிரான்குளத்தில் அதிகாலை 3.30 மணியளவில் பயணிக்கும் போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டு வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும்,இவ் விபத்துக்குள்ளான வாகனம் பாரியளவு சேதம் ஏற்பட்டுள்ளதுடன்,பழங்கள் சிதறுண்டு காணப்பட்டது.
இவ்விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.