மங்களேஸ்வரி நீக்கம் தொடர்பில் திடுக்கிடும் இரகசியம் (Video)
மட்டக்களப்பு மாவட்டதில் 2020ம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இருந்த சட்டத்தரணி திருமதி.மங்களேஸ்வரி சங்கரின் பெயர் நீக்கப் பட்டமை பிழை, வேட்பாளர் பட்டியலில் சட்டத்தரணி திருமதி.மங்களேஸ்வரி சங்கரின் பெயரை தமிழரசுக் கட்சியின் முன்னாள் செயலாளர் கி.துரைராஜசிங்கம் உள்வாங்காமல் நீக்கம் செய்தமை பெரும் தவறு என விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண மூத்த தளபதி காந்தன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மூத்த ஊடகவியலாளர் வேதனாயம் தலைமையில் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் மக்கள் சந்திப்பில் இக் கருத்து தெரிவிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் யோகன் பாதர் அவர்கள் ஊடாக கூட்டமைப்பின் தலைர் இரா.சம்பந்தனுடன் கதைத்து சாணக்கியனை இணைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அதன் பின்னர் இரா.சம்பந்தன் தலைமையில், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை . சேனாதிராஜா மற்றும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்துரையாடிய போது விடுதலைப்புலிகளை எமது கட்சிக்குள் எடுக்கக் கூடாது, அவர்கள் செருப்பு, எங்களை பாதுகாப்பதற்காக அவர்கள் இருந்து விட்டு போகலாம் என மாவை, துரைராஜசிங்கம் சம்பந்தனிடம் கூறியதாக விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் யோகன் பாதரிடம் திரு சம்பந்தன் கூறியதாக விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண மூத்த தளபதி காந்தன் குறித்த நிகழ்வில் சுட்டிக் காட்டியுள்ளார்.
அது மட்டுமல்லாது தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட சிறப்பு இணைப்பாளராக உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா அவர்கள் சாணக்கியன் அரசியலில் வருவதை தடுத்ததுடன் இன்று வரையும் தடையாக இருப்பதாகவும் குறிப்பிட்ட காந்தன் தமிழரசுக் கட்சி தலைமைக்கும் அக் கட்சிக்கும் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
விடுதலைப்புலிகளையும், ஈழவிடுதலைப்போராட்டத்தையும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தொடர்பில் யாரும் வாய் திறக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
தொடர்புடைய செய்தி
முக்கியஸ்தர் கொலை தொடர்பில் விடுதலைப்புலிகள் மூத்த தளபதி சுவிட்சர்லாந்தில் பரபரப்பு வாக்கு மூலம்