மின்னலுடன் கூடிய மழை ;13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் அல்லது இரவு வேளையில் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் அமுலாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.