முற்றுகையிடபட்ட விபச்சார விடுதி ; வசமாக சிக்கிய மூன்று பெண்கள்
நீர்கொழும்பு பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்றை வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையினர் முற்றுகையிட்டு, மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.
நேற்று (15) நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொப்பரா சந்தி பகுதியில், வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் இந்த முற்றுகை நடத்தப்பட்டது.

மேலதிக நடவடிக்கை
இதன்போது, குறித்த விடுதியை முகாமைத்துவம் செய்த பெண் ஒருவரும், விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக அங்கு தங்கியிருந்த மேலும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 31, 35 மற்றும் 40 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் வாரியப்பொல, பூஸ்ஸ மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.