முச்சக்கர வண்டி - சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி
காலியில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அடகொஹொட - மஹலுதண்ட வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (20) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி மற்றும் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதியும் சைக்கிளின் செலுத்துனரும் காயமடைந்துள்ள நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் ர் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் ஆவார். மேலும் விபத்து தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.