மரணச்சடங்கில் கலந்துகொண்ட மூன்று அமெரிக்க ஜனாதிபதிகள்; கடும் பாதுகாப்பு
முன்னாள் அமெரிக்க உள்துறை செயலாளர் கொலின் பவலின் (colin powell) மரணச் சடங்கு நேற்று நடைபெற்றது.
இதில் அமெரிக்க தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden), முன் நாள் ஜனாதிபதி பராக் ஒபாமா (barack obama) மற்றும் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் (George Bush) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஒரு சம்பிரதாய அடிப்படையில் அல்லது, மனிதாபிமான அடிப்படையில் கூட, முன்னாள் ஜானாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) இதில் கலந்து கொள்ளவில்லை. கொலின் பவல் உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
அத்தோடு முன்னாள் ஜனாதிபதி பில் கிளிங்ரன் (Bill Clinton) உடல் நலக் குறைவில் உள்ளதால அவரது மனைவி ஹெலரி கிளிங்ரன் (Hillary Clinton) பவலின் மரணச்சடங்கில் கலந்துகொண்டார்.
பென்டகன் பாதுகாப்பு நிலையத்திற்கு சொந்தமான வளாகம் ஒன்றில் இந்த இறுதிக் கிரிஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில் கொலின் பவலின் (colin powell)மரணச்சடங்கில் சுமார் 5 அடுக்கு பாதுகாப்பு அங்கே போடப்பட்டு மிக மிக முக்கியமான நபர்கள் மட்டுமே அங்கே செல்ல அனுமதிக்கப்படிருந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.



