இலங்கையில் பறிபோகவுள்ள மூன்று முக்கிய அமைச்சர்களின் பதவி?
விமல் வீரவன்ச, (Wimal Weerawansa) வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) மற்றும் உதய கம்மன்பில (Udaya Gammanpila) ஆகிய மூவரையும் அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், (Gotabaya Rajapaksa) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) கோரிக்கை விடுத்துள்ளார் என்று அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா பயணிப்பதற்கு முன்னர் இது தொடர்பான யோசனையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார் எனவும், இவர்கள் மூவரையும் வைத்துக்கொண்டு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது எனவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 2022ஆம் ஆண்டு ஜனவரி முற்பகுதியில் அமைச்சரவை மற்றும் அரச நிறுவனங்களின் பிரதான பதவிகளில் மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது. இதன்போதே மேற்படி மூவரையும் நீக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.