பயணிகள் கவனிக்கவும் ; மூன்று புகையிரத கடவைகள் மூடல்
மாத்தளை தொடருந்து மார்க்கத்தின், பேராதனை மற்றும் கண்டி தொடருந்து நிலையங்களுக்கு இடையில், அமைந்துள்ள முல்கம்பொல புகையிரத கடவை, புனரமைப்புப் பணிகளுக்காகத் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
இருவழிப் தொடருந்து பாதைக்கு ஏற்ப இந்த தொடருந்து கடவையைத் தரமுயர்த்தும் நோக்கில் குறித்த புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, இன்று (10) மாலை 6 மணி முதல் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை இந்த தொடருந்து கடவை வாகனப் போக்குவரத்திற்காக முழுமையாக மூடப்பட்டிருக்கும்.
கெட்டம்பே - கண்டி மேல்பாதை மற்றும் வில்லியம் கொபல்லாவ மாவத்தையை இணைக்கும் குறித்த முல்கம்பொல தொடருந்து கடவை மூடப்படுவதால், குறித்த காலப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காகப் பொதுமக்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு தொடருந்து திணைக்களம் கோரியுள்ளது.
மேலும் குறித்த காலப்பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை மற்றும் போக்குவரத்துப் பிரிவினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.