சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் கைது
முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வர் சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோரை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினர் இன்று (25) கைது செய்துள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான நதுன் சிந்தக, அதாவது ‘ஹரக் கட்டா’ (Harak Kata) என்பவரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் உத்தரவுகளிலிருந்து விடுவித்து, வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கும்,

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி அவரை ஒரு சாதாரண கைதியாகத் தடுத்து வைப்பதற்கும், 1,200 லட்சம் ரூபாய் (120 மில்லியன் ரூபாய்) இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் பணிப்பாளர் அருண வர்ஷ விதான என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.