மாயமான நால்வரில் மூவர் உயிரிழப்பு!
மாத்தறை, பிட்டபெத்தர பகுதியிலுள்ள நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற போது காணாமல் போன நான்கு இளைஞர்களில் மூவர், இன்று (27) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படையினரால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதும் மண்ணெண்ணெய் மற்றும் ஒட்சிசன் பற்றாக்குறை காரணமாக தேடுதல் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சடலங்கள் மீட்பு
எனினும் , கடற்படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் பின்னரே சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் 22, 23, 24 வயதான இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன், 24 வயதான இளைஞர் காணாமற் போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றைய தினம், மாத்தறை – பிட்டபெத்தர பகுதியில் நில்வள கங்கையில், 12 பேர் கொண்ட குழுவினர் நீராடச் சென்ற நிலையில் நால்வர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்தனர்.