கடந்த 24 மணித்தியாலங்களில் மூவர் உயிரிழப்பு!
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் காட்டு யானை தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
புத்தளத்தில் பல கிராம மக்கள் சுமார் 30 வருடங்களாக காட்டு யானை பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.
இன்று அதிகாலை நகருக்கு சென்று கொண்டிருக்கும் போது கல்லடி பிரதேசத்தில் 55 வயதான ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
அதேபோல , கெப்பத்திகொல்லாவ பிரதேசத்தில் யானை தாக்கி 61 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தமது விளைநிலத்திற்கு சென்றிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் மன்னார் – தேத்தாவாடி பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான 69 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று முற்பகல் 11 மணியளவில் யானையின் தாக்குதலுக்கு குறித்த நபர் இலக்கானதாக பொலிஸார் தெரிவித்தனர்.