கடலாமைகளை வைத்துச் சுற்றுலாப் பயணிகளிடம் பணம் பறித்த மூவர் கைது
கடலாமைகளைச் சுற்றுலாப் பயணிகளுக்குக் காண்பித்து பணம் ஈட்டியதுடன், அந்த விலங்குகளுக்குத் துன்புறுத்தல் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட மூவரை உனவட்டுன சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தல்பே பகுதியைச் சேர்ந்த 23, 41 மற்றும் 45 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச்சாட்டுகள்
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு கடலாமைகளுக்கு உணவளிக்கச் செய்தல், ஆமைகளைக் கைகளால் மேலே தூக்கித் துன்புறுத்துதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் பலவந்தமாகப் பணம் பறிக்க முயன்றமை போன்ற குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் இதேபோன்று சுற்றுலாப் பயணிகளுக்குக் கடலாமைகளைக் காண்பித்துப் பணம் பறித்த இருவர் உனவட்டுன சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
உனவட்டுன சுற்றுலாப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.