நித்தியின் கைலாசாவை அங்கீகரித்த கனடாவின் மூன்று நகரங்கள்!
தமிழகத்தில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள சர்ச்சைசாமியார் சுவாமி நித்தியானந்தாவின் கைலாசா நகரை கனடாவின் மூன்று நகரங்களின் மேயர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அதன்படி கைலாசா இராச்சியத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கை ஒன்றுக்கு பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் அமைந்துள்ள மூன்று நகரங்கள் அதிகாரபூர்வமாக பதிலளித்துள்ளன.
சர்ரே, விக்டோரியா மற்றும் நானாய்மோ ஆகிய நகரங்களின் மேயர்கள் இவ்வாறு கைசலாசா என்ற அங்கீகாரமற்ற நாட்டின் கோரிக்கைக்கு அதிகாரபூர்வமாக பதிலளித்துள்ளனர்.
நகரங்களில் பிரகடனம்
பெரும் சர்ச்சைக்கரிய சுவாமி நித்தியானந்தவின் தலைமையிலான கைலாசா இராச்சியம் குரு பூர்ணிமா தினமாக கடந்த 3 ஆம் திகதியை அறிவித்திருந்தது. இந்த தினத்தை குறித்த மூன்று கனடிய நகரங்களும் அதிகாரபூர்வமாக தங்களது நகரங்களில் பிரகடனம் செய்துள்ளன.
ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, கைலாசாவின் மரபுரிமைகள் மாதத்தினை அங்கீகரிக்கும் கடிதம் ஒன்றில் கையொப்பமிட்டிருந்தார்.
இந்நிலையில் சர்ரே மேயர் பிரன்டன் லொகீ, நானாமியோ லெனார்ட் கொர்க் மற்றும் விக்டோரியாவின் மேயர் மாரியானே அல்டோ ஆகியோர் உலக அளவில் அங்கீகரிக்கப்படாத கைலாசாவின் கோரிக்கையை ஏற்று அது தொடர்பான பிரகடனம் செய்துள்ளனர்.
அதேவேளை நித்தியானந்தாவின் கைலாசா நாட்டை இவ்வாறு பிரகடனம் செய்த போதிலும் கைலாசா என்ற நாட்டுக்கு அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.