அட்டாளைச்சேனையில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பகுதியில் 110 மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பரிசோதகர் கே.எல்.எம்.முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இருவர் கைது
இதேவேளை, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளிலிருந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து 1050 மில்லி கிராம் கேரள கஞ்சாவும், மற்றையவரிடமிருந்து 500 மில்லி கிராம் கேரள கஞ்சாவும் பொலிஸாரால் கைப்பற்றப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07)ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறிலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.