தமிழர் பகுதியில் மாட்டு இறைச்சியுடன் மூவர் கைது
முல்லைத்தீவு ,புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள் வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்படுகின்ற கால்நடைகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக விற்பனையாகின்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
அந்த வகையில் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து களவாடப்பட்டு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் இருக்கின்ற குப்பை கொட்டுகின்ற பகுதியிலே களவாடப்பட்ட மாடு ஒன்று இறைச்சியாக்கப்பட்டு வெகனார் வாகனத்தில் ஏற்றப்பட்ட நிலையில் வாகனத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை நேற்று (03) அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது பொலிஸ் நிலைய அதிகாரி குறித்த பகுதியில் மேலும் நான்கு மாடுகளின் மண்டை ஓடுகள் காணப்பட்டதாகவும் இவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் மூவரையும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்