மோட்டார் சைக்கிள் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மோட்டார் சைக்கிள் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று பிரதான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஸ்யாலை பிரதேசத்தில் குருநாகல் குற்றப்புலானய்வுப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பஸ்யாலை பிரதேசத்தைச் சேர்ந்த 26, 40 மற்றும் 42 வயதான சந்தேகநபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் மூவரையும் விசாரணைக்குட்படுத்தியதில் 8 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் சில மோட்டார்சைக்கிள் உதிரிப்பாகங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர்கள் குருநாகல், வெல்லவ, பொத்துஹெர, நிட்டம்புவ, வெலிவேரிய, வரக்காப்பொல, ஜா-எல, வெயங்கொட மற்றும் பேலியகொடை ஆகிய பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள்களை கொள்ளையிட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பஸ்யால பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.