இளைஞன் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது
கல்கிஸ்ஸை, ஹுலுதாகொட பகுதியில் உள்ள பாழடைந்த காணியொன்றில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவரை எரித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இந்த கொலையுடன் நேரடியாக தொடர்புடைய இரு முக்கிய சந்தேக நபர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இரண்டு கத்திகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொலை செய்யப்பட்ட நபர் ரத்மலானை மஹிந்தராம வீதியை சேர்ந்த டிகிரா என அழைக்கப்படும் 23 வயதுடைய கவிந்த கயாஷான் ரணவக்க ஆவார்.
குறித்த நபர் கொலை செய்யப்பட்ட பின்னர் 'மொரட்டுவ பாதாள உலகம்' என்ற சமூக ஊடக தளத்தில் பதிவிட்டதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.