மன்னார் வங்காலை கடற்கரைப் பகுதியில் கைதான மூவர்
இலங்கை கடற்படையினர், மன்னார் வங்காலை கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமான முறையில் கண்டல் தாவரங்களின் கிளைகளை வெட்டிய மூன்று நபர்களையும், ஒரு டிங்கி படகையும் நேற்று (11) கடற்படையினரின் பொறுப்பில் எடுத்துள்ளனர்.
கடற்கரைச் சூழல் தொகுதியின் உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதில் கண்டல் தாவரச் சூழல் முக்கிய பங்காற்றுவதால், அச்சூழலைப் பாதுகாப்பதற்காக கடற்படையினர் தொடர்ச்சியான கவனம் செலுத்தி வருகின்றனர்.

சட்டவிரோதம்
அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பல் புஸ்ஸதேவ நிறுவனத்தினால், வங்காலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக வெட்டப்பட்டு அகற்றப்பட்ட கண்டல் தாவரக் கிளைகளைப் போக்குவரத்துச் செய்வதற்குத் தயாராக இருந்த மூன்று நபர்களும் ஒரு (01) டிங்கி படகும் இவ்வாறு கடற்படையினரின் பொறுப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின்போது கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட மூன்று நபர்கள், டிங்கி படகு மற்றும் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட கண்டல் தாவரக் கிளைகள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வனப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.