தமது உயிருக்கு அச்சுறுத்தல் ; நாடளுமன்றில் சுமந்திரன்
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் உட்பட என்னை பின் தொடர்ந்த கிழக்கு மாகாண பதிவிலக்கத்தை கொண்ட மோட்டார் சைக்கிளில் வந்தவர்களினால் எமது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற்தில் இன்று சிறப்புரிமையை பிரச்சினைகளை முன்வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் கூறுகையில்,
ஒக்டோபர் 5 ஆம் திகதி சாணக்கியனும் நானும் நண்பகல் 12.45 மணியளவில் ஹோட்டன் பிளேசில் கூட்டமொன்றில் இரண்டு தனிப்பட்ட வாகனங்களில் சென்றோம். நாங்கள் பயணித்துக்கொண்டிருந்தபோது பாதுகாப்பு தரப்பினர் எங்களை மோட்டார் சைக்கிளொன்று பின் தொடர்ந்து வந்ததாக தெரிவித்து அதன் புகைப்படத்தை எடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தின் இலக்கத் தகடு
கிழக்கு மாகாணத்தின் இலக்கத் தகடை கொண்ட மோட்டார் சைக்கிளே வந்திருந்தது. புலனாய்வு உறுப்பினர் ஒருவர் எங்களை பின் தொடர்ந்ததாக கறுவாத்தோட்டம் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார்.
ஏன் எங்களை இப்படி புலனாய்வு உறுப்பினர்கள் பின் தொடர்கிறார்கள் புலனாய்வு உறுப்பினர்களுக்கு கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே சபாநாயகர் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிய சுமந்திரன் , இது எங்களின் உயிருக்கான அச்சுறுத்தல் என்பதுடன் தமது சிறப்புரிமை மீறப்படுவதாகவும் தெரிவித்தார்.