பெண் சட்டத்தரணிகள் அச்சுறுத்தல் ; மெய்பாதுகாவலர் பிணையில் விடுதலை
பெண் சட்டத்தரணி ஒருவரை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கடுவலை மாநகர முதல்வர் ரஞ்சன் ஜயலாலின் மெய் பாதுகாவலர், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
கடுவலை மேலதிக நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச முன்னிலையில் இன்று (27) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர் மன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில் ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணை செல்ல நீதவான் அனுமதித்தார்.

ஜி. டபிள்யூ. ஜயவர்தன என்றழைக்கப்படும் குறித்த பாதுகாப்பு அதிகாரி, பெண் சட்டத்தரணி ஒருவரை அச்சுறுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.