உயிருக்கு அச்சுறுத்தல்; பதவியை இராஜினாமா செய்யும் பொதுஜன பெரமுன எம்.பி
தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.
கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவும், அமைச்சர் காமினி லொகுகேவும் ஒன்றினைந்து தன்னை தாக்குதாகவும் அவர் கூறினார். எனவே தனது உயிரை பாதுகாத்துக் கொள்ள பாதுக்க பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் சேவையை அரசியலாக்கும் கீழ்த்தரமான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டாம் என அமைச்சர் சரத் வீரசேகரவிடம் பல முறை எடுத்துரைத்தும் அவர் பொருட்படுத்தவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.
அத்துடன் அரசாங்கத்தில் உள்ள ஒரு சில அமைச்சர்களின் செயற்பாடு வெறுக்கத்தக்கது எனவும் ஜகத் குமார இதன்போது மேலும் கூறினார்.