தமிழர் பகுதியொன்றில் சட்டத்தரணிக்கு அச்சுறுத்தல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
திருகோணமலையில் சட்டத்தரணி ஒருவரை அச்சுறுத்தியதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.
பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கானது நீதிமன்றில் நேற்று(17) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேலதிக நீதிபதியால் குறித்த நபரக்கு பிணை வழங்கப்பட்டு வழக்கானது எதிர்வரும் 29ஆம் திகதிக்கு விசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தல்
கடந்த செவ்வாய்க்கிழமை (14) குறித்த சட்டத்தரணியை குறித்த நபர் நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தியதாக சட்டத்தரணியால் அன்று மாலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில குறித்த வழக்கான இன்றையதினம் நீதிமன்றில் விசாரணைக்காக அழைக்கப்பட்டபோது சட்டத்தரணிக்கு ஆதரவாக திருகோணமலையில் உள்ள அனைத்து சட்டத்தரணிகளும் முன்னிலையாகி இருந்ததுடன் எதிர் தரப்பிற்கு ஆதரவாக கந்தளாயில் இருந்து வருகை தந்த இரு சட்டத்தரணிகள் முன்னிலையாகி இருந்தனர்.
குறித்த வழக்கை ஆராய்ந்த நீதவான் குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் ஆராய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தவிட்டதுடன் எதிர்வரும் 29 திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.