ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் சிக்கினர் ; பொதுமக்களிடம் பொலிஸார் கடும் எச்சரிக்கை
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் நேற்று (30) பல நபர்கள் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் 28,470 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதில் சந்தேகத்தின் பேரில் 523 நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றங்கள் தொடர்பில் நேரடியாக 09 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேபோல இந்த நடவடிக்கைகளின் மூலம் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 226 நபர்களும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 161 நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 382 குடிபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகளும், கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமைக்கு அமைவாக 73 நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 4,211 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.