சீனா - இலங்கை இடையே புதிய விமான சேவை ஆரம்பம்
சீனாவின் பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று, இன்று (31) பிற்பகல் பெய்ஜிங்கின் டெக்ஸிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய விமானத் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கன்னிப் பயணத்திற்காக A-330 எயார்பஸ் ரக விமானம் பயன்படுத்தப்பட்டது.
இவ்விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது, பாரம்பரிய முறைப்படி நீர்த்தாரை மரியாதை வழங்கப்பட்டு உற்சாகமாக வரவேற்கப்பட்டது.
இன்று பிற்பகல் 01.46 மணியளவில், சீனாவிலிருந்து JD-487 என்ற இலக்கத்தைக் கொண்ட விமானம் கட்டுநாயக்கவை வந்தடைந்தது.
இதில் 170 பயணிகள் மற்றும் 13 ஊழியர்கள் பயணித்திருந்தனர். இனிவரும் காலங்களில், இந்த விமான சேவை வாரத்திற்கு இருமுறை (செவ்வாய் மற்றும் சனி)
பின்வரும் நேர அட்டவணைப்படி இயங்கும்:
கட்டுநாயக்க வருகை - பிற்பகல் 02.20 மீளப் புறப்படும் நேரம் - பிற்பகல் 04.20 பயணக் காலம் - 08 மணித்தியாலங்கள்